News

சிறுமியை கடித்துக் குதறிய காட்டு நாய்கள்: ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல் துண்டுகள் .

உக்ரைன் நாட்டில் 12 வயது சிறுமி ஒருவர் காட்டு நாய்களால் தாக்கப்பட்டு கொடூரமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் Khartsyzsk நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி Liza Kanareikina, சம்பவதினத்தன்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடியுள்ளனர்.

சுமார் 18 மைல்கள் தொலைவில் உள்ள Donetsk வனப்பகுதியில், ரத்த வெள்ளத்தில் Liza-வின் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
அவர் உடல் கிடந்த இடம் பனியால் சூழப்பட்டு, அவை மீது Liza-வின் ரத்தம் படர்ந்திருந்தது.

இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது, Liza காட்டு நாய்களால் தாக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது. எனினும், தடயவியல் பகுப்பாய்வு முடிவுகள் வரும் வரை, சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை, உறுதியாகக் கூற முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் போது, உக்ரைனின் கிழக்கு பகுதியில் இந்த நாய்கள் அப்படியே விடப்பட்டதாகவும், அதன் பின்னர் காட்டுமிராண்டித்தனமாக மாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றால் பொதுமக்களுக்கு, அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top