News

சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கமாட்டார் சம்பந்தன்!

70 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ளூராட்சித் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு எதிர்வரும் தினங்களை ஒதுக்கியிருப்பதன் காரணமாக, இந்நிகழ்வில் பங்குபற்ற முடியாதென அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள பிணைமுறி மோசடி அறிக்கை மீதான விவாதத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது.

இதனிடையே இலங்கையின் 70ஆவது சுதந்திரதினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “ 70ஆவது சுதந்திர தினத்தினை கூட்டமைப்பு புறக்கணித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது, ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசாரங்களில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளமையினால் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து தேசிய நிகழ்வான சுதந்திர நிகழ்வில் பங்கேற்க முடியாதுள்ளது.மாறாக இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தினை புறக்கணிப்பது தமித் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் இல்லை எனவும் போலி கருத்துக்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top