சுவிட்சர்லாந்தில் அடித்து கொல்லப்பட்ட இலங்கை அகதி குறித்த தகவல் .

சுவிட்சர்லாந்தில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்த இலங்கை அகதியின் பெயர் றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் என தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன் கிழமை இலங்கை அகதி 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது 47 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் குறித்து விபரம் வெளியாகியுள்ளது. அந்த இளைஞனின் பெயர் றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் எனவும் மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், சுவிட்சர்லாந்தின் ECUBLENS VD பகுதியில் கடந்த 3 வருடங்களாக வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.