News

சுவிட்சர்லாந்தில் கொடூர தாக்குதலுக்கு திட்டமிட்ட பயங்கரவாதிகள் .

பாரிஸில் தொடுக்கப்பட்ட தாக்குதலை விடவும் சுவிட்சர்லாந்தில் கொடூர தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டதை பொலிசார் முறியடித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், தொடர் விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

கைதான 10 பேரில் ஒருவர் வெளிநாட்டவர் எனவும், அவர் அளித்த தகவல்கள் அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது எனவும் கூறப்படுகிறது. குறித்த 27 வயது இளைஞரே தமது சகாக்களுடன் இணைந்து பாரிஸ் நகரில் பாரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு முன்னெடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி இவரே பாரிஸ் தாக்குதல் திட்டங்களை வகுத்ததாகவும், டெலிகிராம் செயலியை அதற்கு பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸ் ஊடகங்கள் கடந்த நவம்பர் மாதமே இவர் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

குற்றவியல் புகார் ஒன்று பொலிசாரிடம் விசாரணைக்கு வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய சுவிஸ் அதிகாரிகளுக்கு குறித்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

130 அப்பாவி பொதுமக்களை காவு வாங்கிய பாரிஸ் தாக்குதலைவிடவும் அதிக உயிர்ச்சேதம் விளைவிக்க கூடிய தாக்குதலை முன்னெடுக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியது, சுவிஸ் பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top