சுவிஸ் மலைப்பகுதியில் பாரிய பனிச்சரிவு: 10 பேர் மாயம் .

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாகாணத்தில் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. வாலெய்ஸ் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 10 பேர் மாயமாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
குறித்த பனிச்சரிவானது Col de Fenestral பகுதியில் சுமார் 2,500 மீற்றர் உயரத்தில் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் பொலிசாரும் சிறப்பு குழுவினரும் தற்போது தேடும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.< மேலதிக தகவல்கள் தொடர்பில் தேடுதலில் இறங்கியுள்ள குழுக்களிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இன்று மட்டும் பல முறை பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வாலெய்ஸ் மாகாணமானது skiers எனப்படும் சாகச விரும்பிகளுக்கு தோதான இடமாகும். இங்குள்ள விண்ணை முட்டும் மலைகளும் அதன் சரிவுகளும் சாகசப்பிரியர்களை ஈர்த்து வருகிறது.