ரஷ்ய பயணிகள் விமானத்தில் செல்போன் சார்ஜர் வெடித்து பயணியர் இருக்கையில் தீப்பிடித்து எரிந்ததால் விமானம் முழுதும் புகை மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து Volgograd நோக்கி சென்ற விமானம் தரையிரங்கும் போது பிஸ்னஸ் க்லாஸ் கேபினில் இருந்த செல்போன் சார்ஜர் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்தது.
>இதில் அருகில் இருந்த விமான இருக்கையில் தீ பரவியதால் பிஸ்னஸ் க்லாஸ் கேபின் முழுதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. தீ விபத்தின் காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் பதட்டத்தில் பீதி அடைந்ததால் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து தொடர்பான 49 வினாடிகள் ஓடும் வீடியோவும் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் தீப்பிடித்தவுடன் தீயை அணைக்க தண்ணீர் கேட்டு பயணிகள் அலரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. விபத்து குறித்து பயணி ஒருவர் தெரிவிக்கையில் “ நாங்கள் விமானம் தரையிரங்கியதும் விமானத்தில் இருந்து வெளியேர தயாராக இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டு புகை பரவியது.
உடனடியாக விமானத்தின் அவசரகால வழியை விமானிகள் திறந்தனர், இதன் வழியே சிலர் விரைவில் விமானத்தை விட்டு வெளியேறினர், மற்றவர்கள் அதிக பீதி அடையாமல் சாதாரண வழியில் வெளியேறினோம் “ என்றார். விமான நிறுவன தரப்பில் இந்த விபத்தினால் யாருக்கும் எந்த காயம் உட்பட அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்தது.