தமிழர்களை கொலை செய்வதாக சைகை காட்டிய பிரிகேடியர் தாய்நாட்டிற்கு அழைப்பு!

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றி வரும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய அவர் இன்று (புதன்கிழமை) இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், என்ன காரணத்திற்காக பிரிகேடியர் மீள அழைக்கப்பட்டார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இலங்கையின் 70வது சுதந்திர தினத்தில், பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தின் போது, போராட்டத்தில் பங்கேற்றவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்வதாக போராட்டத்தில் பங்கேற்றவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்வதாக சைகை காட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.