News

தென்னாப்பிரிக்காவில் காவல் நிலையம் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு – 5 போலீசார் பலி

தென்னாப்பிரிக்காவின் தென்கிழக்கில் உள்ள நகரில் காவல் நிலையத்தின்மீது இன்று மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போலீசார் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

தென்னாப்பிரிக்காவின் தலைநகர் ஜோகனஸ்பர்க் நகரில் இருந்து சுமார் 800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நுக்கோபோ நகரில் உள்ள காவல் நிலையத்தை இன்று அதிகாலை முற்றுகையிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 5 போலீசார் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை அங்கிருந்த ஒரு போலீஸ் வாகனத்தில் அள்ளிப்போட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் விஷ்ணு நாயுடு தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top