News

தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி, பலர் படுகாயம் .

ரஷ்யாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடைபெற்று வந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் Kizlyar நகரில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேவாலயத்தின் வெளியே குழுமியிருந்த மக்களின் மீது திடீரென்று குறித்த பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் தேவாலயத்தினுள் முன்னேற இருந்த நபரை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த நபர் அங்கிருந்து மாயமானதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த வேளையில், தேவாலயத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் குழுமி இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்கள் 4 பேரும் பெண்கள் எனவும். கொலையாளியின் கூடவே ஒரு பெண்ணும் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சம்பவயிடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top