நடேசனையும் புலித்தேவனையும் வெள்ளைக் கொடியுன் செல்ல அனுமதித்த தமிழ் தலைமை?

நடேசனையும் புலித்தேவனையும் வெள்ளைக்கொடியுடன் செல்லுங்கள் என்று கூறினார்கள். ஆனால் அப்படி சென்றவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
பாசையூரில் மாநாகர சபை வேட்பாளர் ஆனோல்ட்டை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல்பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். ஐ.நா அமர்விற்கு கூட்டமைப்பு இரண்டு பக்கத்தில் மட்டும் அறிக்கை சமர்ப்பித்தனர் என்று கஜேந்திரகுமார் கூறும் அதேநேரம் தான் நடேசன் புலித்தேவன் போன்றோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த விடயத்தினை கஜேந்திரகுமார் இன்றுவரை ஐ.நாவிற்கு சாட்சியாக எழுதி வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.