News

நாட்டையே உலுக்கிய இரட்டை கொலை வழக்கு: வாழ்நாள் சிறை விதித்த நீதிமன்றம் .

ஜேர்மனியில் வேலை இல்லாத மன அழுத்தத்தில் இரட்டை கொலை செய்த நபருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் ஹெர்ன் நகரத்தில் பெற்றோருடன் வசித்து வந்த மர்கல் ஹெசி என்னும் 20 வயது நபர், வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

எப்போதும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சோகத்தில் மூழ்கிக்கிடந்த அந்த நபர் கடந்த மார்ச் மாதம் தன் வீட்டருகே வசித்து வந்த 9 வயது சிறுவனை 52 முறை கொடூரமாக குத்திக் கொன்றுள்ளார். கொலை செய்த பின் தன் நண்பன் வீட்டுக்கு தப்பியோடிய அந்த கொடூரன், தன் நன்பணையும் 62 முறை கொடூரமாக குத்திக் கொன்றுள்ளான்.

இரண்டாவது கொலைக்கு பின் தானாக சரணடைந்த ஹசியை விசாரித்த நீதிபதிகள், மைனராக கருதி தண்டனைய குறைவாக வழங்கியுள்ளனர். குற்றத்தை தானாக ஒப்புக்கொண்ட ஹசி மிகவும் சைகோ மனப்பான்மையுடன் இருந்த நிலையில் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஹசி செய்த குற்றத்தின் தண்டனையாக வாழ்நாள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top