நான்கு பிள்ளைகளின் உயிரை பலி கொண்ட மர அடுப்பு!

கடந்த மாதம் நோவ ஸ்கோசியவில் பப்நிகோ ஹெட் என்ற கிராம புறத்தில் ஏற்பட்ட தீயினால் நான்கு பிள்ளைகள் கொல்லப்பட்டனர். மர அடுப்பினால் ஏற்பட்ட விபத்தென நோவ ஸ்கோசிய தீயணைப்பு மார்ஷல் தெரிவித்துள்ளார். தனியுரிமை சட்டங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்படாமல் இருந்த காரணங்கள் இன்று வெளியிடப்பட்டதாக அறியப்படுகின்றது.
தீயிலிருந்து எம்மா கென்னடியும் அவரது திருமணத்திற்குரிய உறவு பார்ட்னர் பில் புரொடியும் தப்பி விட்டதாகவும் ஆனால் வேகமாக பரவிய தீ நான்கு மாதங்களே ஆன வின்ஸ்ரன் புரோட்டி, நான்கு வயது ஜெய்லா கென்னடி, ஏழு வயது மியா புரொட்டி மற்றும் ஏழு வயது ஒன்றுவிட்ட சகோதரம் மேசன்; கிரான்ட் ஆகிய நால்வரின் உயிரை பலி கொண்டது.