Canada

பற்றிக் பிறவுனிற்கு எதிரான சதி விவகாரம் .

பல்வேறு அழுத்தங்கள், பொய்புரட்டுக்கள், நம்பிக்கைத் துரோகங்கள் என திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட திரு. பற்றிக் பிறவுன் அவர்களின் வெளியேற்றமானது ஒரு கூட்டுச் சதியென்பதை பல ஊடகங்களும் வெளிக் கொணர்ந்த வண்ணமுள்ளன.

வீடீயோவில் தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குரலாகச் செயற்படும் ஒருவர் தனது கருத்துக்களை வலுவான ஆதாரங்களுடன் முன் வைத்துள்ளார். அதிலும் இரண்டு பெண்களினை எவ்வாறு ஒரு ஊடகம் தனது சதிவலைக்காக பயன்படுத்தியது என்பதையும், அவ்வாறான சம்பவங்களை நடைபெறவில்லையென்பதை எவ்வாறு சாட்சியங்கள் நிருபித்தன என்பதையும் இந்த பெண் உரிமையாளர் திறம்பட நிரூபித்துள்ளார்.

திரு. பற்றிக் பிறவுனின் தலைவராகும் விண்ணப்பதை நிராகரிப்பதற்காக அவரை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கினார்கள். ஆனால் அதே தினம் தலைமைப்பதவிக்குப் போட்டியிடுவதை அறிவித்த திரு. பற்றிக் பிறவுன் பெரும்பாண்மை ஆதரவோடு தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

ஆனால் எவ்வாறெனினும் திரு.பற்றிக் பிறவுனின் போட்டியினை நிராகரிக்க வேண்டுமென விரும்பியர்வர்களிற்கு அது நனவாகாத ஒரு கனவாகப் போய்விட்டது. அடிப்படை கட்சி அங்கத்துவ உரிமையை திரு.பற்றிக் பிறவுனிடமிருந்து பறிக்க முடியாது என்பது அது.

நாளை அல்லது நாளை மறுதினம் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் குழு திரு.பற்றிக் பிறவுன் அவர்களின் விண்ணப்பத்தினை நிராகரிப்பதாக அறிவிக்கலாம். ஆனால் அதனை மீளாய்வு செய்து அந்த முடிவு சரியானதா இல்லையா என்பதை பரிசீலிக்கும் தகுதி கட்சியின் இயக்குனர் சபையிடம் இருக்கின்றது.

கட்சியின் இயக்குனர் சபையே இந்த திட்டமிட்ட சதியைத் தடுப்பதற்கான ஆதாரசுருதியாக தொடர்ந்தும் விளங்கி வருகின்றது. எனவே அவர்கள் நிச்சயம் திரு.பற்றிக் பிறவுன் அவர்களின் தலைவருக்கான போட்டியை அங்கீகரிப்பார்கள். அப்படி அங்கீகரிக்காதவிடத்து, அவர்கள் கட்சி கொடுக்கப் போகும் விலை அதிகம்.

இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு லிபரல் அரசு தான் பணவூட்டம் கொடுத்ததா என்பதை கீழேயுள்ள புலனாய்வு வீடியோ ஆதாரத்துடன் தெரிவிக்கின்றது. ஜனநாயகம் நிலைத்து சதிகாரத்தனம் சரிவதற்கான எழுச்சியை திரு.பற்றிக் பிறவுன் ஏற்படுத்தும் இந்த சதியில் மற்றைய தலைமை வேட்பாளர்களின் பங்கு, குறிப்பாக இரண்டு வேட்பாளர்களின் பங்கு எத்தகையது என்பதை அது வெளிக் கொணரும்.

இந்த ஊழல் நாடகம் கனடியர்களிற்குப் புதியது. அதிலிருந்து மீளெழுச்சி பெறுவதென்பது உலகிற்கே புதிது. ஆபத்தின் போது ஓடிவந்த ஒருவனிற்கு ஆதரவளிப்பது எமது கடமை. ஆதனை நன்றே செய்வோம்.

நிலத்தில் இருந்து மக்களோடு உணவருந்தினாலும், கோவிலில் வேட்டியுடன் நின்றாலும் தனது முகப்பதிவு மற்றும் ரூவிட்டர் மூலம் கனடியர்கள் அனைவரோடும் ஒளிவுமறைவின்றிப் பகிர்ந்து கொள்ளும் திரு. பற்றிக் பிறவுன் வெளிப்படைத் தன்மையை தாராளமாகவே பேணுகின்றார்.

மூடிய கதவுகளின் பின்னால் மர்ம அரசியல் மற்றைய தலைவர்களிலிருந்து வேறுபடுகின்றார். ஜனநாயகம் ஒன்றாரியோ பழமைவாதக் கட்சியில் இருக்கின்றது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு எம்மிடமே தரப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top