News

பிரான்ஸ்: ஆப்கன்-எரித்திரியாவினர் இடையே மோதல் – துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் காயம்

பிரான்சின் வடக்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் மற்றும் எரித்திரியாவை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் காயமடைந்தனர்.

பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரான கலாயிஸ் நகரில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் எரித்திரியாவை சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்தனர். மேலும் 12 பேருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரான்சின் உள்துறை மந்திரி ஜெராட் கொலொம்ப் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top