Canada

பிரிட்டிஷ் கொலம்பிய நெடுஞ்சாலையில் கோர விபத்து!

இரண்டு பேரூந்துகள், இரண்டு செமி-டிரெய்லர்கள் மற்றும் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் கிட்டத்தட்ட 29பேர்கள் வரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹோப் என்ற இடத்தில் Coquihalla நெடுஞ்சாலையில் ஞாயிற்றுகிழமை இரவு விபத்து நடந்துள்ளது. வாகனங்களிற்குள் அகப்பட்டு கொண்டவர்களை மீட்க பணியாளர்கள் மணித்தியாலக் கணக்கில் போராடினர் என கூறப்பட்டுள்ளது.

தரை மற்றும் ஆகாய மார்க்கமாக 22 அம்புலன் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்ப பட்டுள்ளது. காயமடைந்த 29-பேர்கள் தவிர்ந்த மற்றய 126-பேர்கள் வரை வெப்பமயமாதல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வாகனங்கள் நொருங்கும் சத்தம் 100மீற்றர்கள் தூரம் வரை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய வாகனம் அணைக்கட்டிற்கு கீழே உருண்டு மற்றொரு வாகனத்தின் மேல் ஏறியுள்ளது. வேறொரு செமியும் அணைக்கட்டின் கீழே சென்று வாகனங்களுடன் மோதுப்பட்டுள்ளன.

கனடா கிரேஹவுன்ட் பேரூந்து கம்பனியின் பேரூந்து ஒன்றும் விபத்தில் சிக்கியுள்ளதாக கம்பனி உறுதிப்படுத்தியுள்ளது. பேரூந்தில் 50-பயணிகளும் சாரதியும் இருந்துள்ளனர். விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை .

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top