News

பிரித்தானியாவில் நடந்த பயங்கர வெடிவிபத்து: தாயுடன் மூன்று மகன்கள் இறந்திருக்கலாம் என்ற அச்சம்

பிரித்தானியாவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தின் காரணமாக இறந்த ஐந்து பேரில், தாய் மற்றும் மகன்கள் இறந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லெய்செஸ்டர் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தின் காரணமாக சமப்வ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீ கடுமையான போராட்த்திற்கு பின் அணைத்தனர்.

வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்ததால் அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடை மற்றும் அதற்கு மேற்பகுதியில் உள்ள ஒரு வீடு கடுமையாக சேதமடைந்தது. அதுமட்டுமின்றி பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையி, 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த வெடிவிபத்தில் Scotty(15) என்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது தாய் Mary Ragoobar(46), மற்றும் இவரின் மற்ற இரண்டு மகன்களான Shane(18) மற்றும் Sean(17) ஆகியோர் இறந்திருக்கிலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இறந்த ஐந்து பேர் தொடர்பான எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படாத காரணத்தால் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரியவரும் என்றும் தாயுடன் இருந்த மகன்கள் தொடர்பான புகைப்படங்கள் அங்கிருக்கும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top