பிரித்தானியாவில் பயங்கர தீ விபத்து:

பிரித்தானியாவில் கேஸ் வெடித்ததன் காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பிரித்தானியாவின் Leicester பகுதியில் அமைந்துள்ள Hinckley சாலையில் இருக்கும் கடை ஒன்றில் திடீரென்று குண்டு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. அதன் பின் அங்கிருந்த கடை மற்றும் அருகில் இருந்த கட்டிடங்களில் தீ பரவியதால், உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினர் கட்டுக்கடங்காமல் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக உள்ளே யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பான காட்சிகளை அங்கிருக்கும் மக்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதுடன், இது குறித்து அதில் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர் திடீரென்று குண்டு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்து பார்த்த போது தீ பற்றி எரிகிறது, இது நிச்சயமாக கேஸ் வெடித்ததன் காரணமாகவே ஏற்பட்டிருக்கிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் பொலிசார் இது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தின் காரணமாக பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.