பிரித்தானியாவுக்கு இலங்கை கொடுத்த தகவல்? பிரியங்க தொடர்பில் !

பிரியங்கவை உடனடியாக லண்டனில் இருந்து கொழும்பு திரும்புமாறு உத்தரவிட்டதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும் பிரித்தானிய அரசாங்கத்துக்கு இலங்கை தகவல் வழங்கியுள்ளது.
இந்த தகவலை ஆசிய – பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கிளைவ் எபோர்ட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். எமது தெருக்களில் சிலர் வெறுப்பைத் தூண்டியுள்ளனர்.
அந்த குற்றம் தொடர்பாக பிரிகேடியர் விசாரிக்கப்படுவாரா? என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கிளைவ் எபோர்ட், ஆசிய – பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்லிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மார்க் பீல், பிரித்தானியா இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இதுகுறித்து பேசியிருந்தேன்.
இலங்கையும் அரசாங்கம் இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இதற்காகவே பிரியங்கவை உடனடியாக லண்டனில் இருந்து கொழும்பு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும் பிரித்தானிய அரசாங்கத்துக்கு இலங்கை தகவல் தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
என பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகத்தை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.