Canada

பூர்வகுடி மக்களின் உரிமைகளை மேம்படுத்த சட்டம்: ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

நாட்டின் பூர்வ குடிமக்களின் உரிமைகளை மேம்படுத்த தேவையான கட்டமைப்பை உருவாக்க இனி தனது அரசு பாடுபடும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ”நாட்டின் இரு முக்கிய பூர்வகுடி மக்களும் இணைந்து அவர்களது உரிமைகளை அங்கீகரித்து செயல்படுத்த வேண்டும்” என்று House of Commonsல் செவ்வாய் அன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாறிய ஜஸ்டின் ட்ரூடோ, பூர்வகுடிமக்களின் உரிமைகளை மேம்படுத்தும் வகையிலான அவரது பார்வையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பூர்வகுடிமக்கள் தங்களின் உரிமைகள் மூலம் தங்களின் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் வழிவகை செய்யப்படும். எனவே இரண்டு சமூகத்தின் உரிமையை நிலைநாட்டாமல் அம்மக்களின் எதிர்காலத்தை அரசால் நிர்ணயிக்கமுடியாது, எனவே இது தொடர்பாக விரைவில் சட்டம் இயற்ற இந்த அரசு நடவைக்கை மேற்கொள்ளும்என தெரிவித்தார்.

ஆகவே நாட்டின் பூர்வகுடிகளான Metis மற்றும் Inuit ஆகியோர் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை கலைந்து தங்கள் சமூகத்தில் உள்ள அரசியல் இட ஒதுக்கீடு பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்துதல் உட்பட குடிநீர் பிரச்சனை, அதிகரிக்கும் இளைஞர்களின் தற்கொலை ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இனி அரசு இயந்திரம் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

National Consultations தலைவர் கரோலின் பென்னட், மற்றும் நீதித்துறை அமைச்சர் ஜோடி வில்சன்-ரேபோட்ட் ஆகியோரின் தலைமையில் இந்த புதிய சட்டமானது மேம்படுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top