India

பெங்களூர் அருகே 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

பெங்களூர் அருகே 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிர் இழந்தார்கள். 8 பேர் மீட்கப்பட்டார்கள். மேலும் 10 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

அந்த கட்டிடம் முதலில் தனியார் தங்கும் விடுதியாக இருந்தது. அதனை வணிக வளாகமாக மாற்ற கட்டிட உரிமையாளர் முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 6 மாதங்களாக அந்த அடுக்குமாடி கட்டிடத்தை வணிக வளாகமாக மாற்ற புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வர்ணம் பூசுதல், சிறிய அளவிலான கட்டுமான பணிகள் ஆகியவை நடைபெற்றன. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் திடீரென்று அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கட்டிட சுவர்கள் சாலையோரம் இருந்த 4 கடைகள் மீது விழுந்தன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top