News

மசூதி தாக்குதலுக்கு பதிலடி – 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக எகிப்து அறிவிப்பு

எகிப்தில் கடந்த ஆண்டு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக வடக்கு சினாய் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணூவம் தெரிவித்துள்ளது.

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த ஆண்டு இறுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் இயங்கி வரும் தீவிரவாத கிளர்ச்சியாளர்கள் குழு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு அதிபர் அல்-சிசி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதே வடக்கு சினாய் பகுதியில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் நேற்று தெரிவித்தது. 4 தீவிரவாதிகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top