News

மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சன் சூகி வீடு மீது குண்டு வீச்சு

மியான்மர் நாட்டில் வெளியுறவு மந்திரியாக இருக்கும் ஆங் சன் சூகி வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடினர்.

மியான்மர் நாட்டு பெண் தலைவர். ஆங் சன் சூ கி. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் ஆளும் கட்சி தலைவராக இருக்கிறார். அந்நாட்டு வெளியுறவு மந்திரியாக பதவி வகிக்கிறார். மியான்மரில் ரோகிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலால் ஆங் சன் சூ கிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் இன்று யங்கூனில் ஆற்றங்கரையில் உள்ள ஆங் சன் சூ கி வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செல்வதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேடி வருகிறார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top