மீண்டும் தோல்வியில் முடிந்த தங்க வேட்டை!

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு நடைபெற்ற அகழ்வுப்பணி தோல்வியில் முடிவடைந்துள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் உள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன.

????????????????????????????????????
இதன்போது, அகழ்வுக்கான இயந்திரத்தின் அளவு போதாமையால், அன்றைய தினம் அகழ்வு பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அகழ்வுப்பணிகள் இன்று ( காலை முல்லைத்தீவு நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில், மீள ஆரம்பிக்கப்பட்டன. குறித்த பகுதியில் 4 மணத்தியாலங்களாக இடம்பெற்ற அகழ்வு பணியில், எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.