Canada

மீண்டு வந்தார் பற்றிக் பிறவுன் – பெரிய தடை தாண்டப்பட்டது.

மீண்டு வந்தார் பற்றிக் பிறவுன் – பெரிய தடை தாண்டப்பட்டது.

இன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தடைகளைத் தாண்டி அடுத்த கட்ட நகர்விற்கு ஏனைய தலைமை வேட்பாளர்களுடன் ஒருவராக திரு. பற்றிக் பிறவுன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது திரு.பற்றிக் பிறவுனின் தலைமைத் தேர்வைத் தடுப்பதற்கான முயற்சிகளை முறியடித்துள்ளது.
சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்களையும் முறியடித்து மாகாண தேர்வுக் குழுவின் கேள்விகளிற்கு பதிலளித்த திரு.பற்றிக் பிறவுன் தான் அசைக்க முடியாத சக்தியென்பதை நிலைநாட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக, கிறிஸ்ரீன் எலியட் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான ரான்டி கில்லர் திரு. பற்றிக் பிறவுன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார்.

இருந்தபோதும் அவைகள் ஆதரமற்றவை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து களமிறங்கிய திரு.பற்றிக் பிறவுன் கட்சியின் மாகாண வேட்பாளர் தெரிவுக்குழுவுடனான நேர்முகத் தேர்வில் பங்குபற்றியிருந்தார்.

திரு, பற்றிக்கின் வருகையைத் தடுப்பதற்காக ஊடகங்களில் வெளியிடப்படும் பழிசுமத்தல்கள் பாவிக்கப்படட்ட போதும் அவைகளை வெறுமனே துடைத்தெறிந்தார் திரு.பற்றிக் பிறவுன்.

இதிலும் குறிப்பாக தற்காலிகத் தலைவர் மீதான ஆதாரத்துடனான குற்றச்சாட்டு மற்றும் இன்று திரு. பற்றிக் பிறவுனை களங்கப்படுத்த முயன்று தோற்றுப் போன ரான்டி கில்லர் மீதான ஆதாரக் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவற்றை லிபரல் சார் ஊடங்கள் வெளிக் கொணரவில்லை.

இதுவே ஊடக நடுநிலை என்பது கனடாவில் இப்போது இருந்ததில்லை, கட்சி சார்ந்த, குறிப்பாக மேற்குடியினர் சார்ந்த நிலைப்பாடுகளைப் பிரதிபலிப்பதாக ஊடகங்கள் இருக்கின்றன என்ற பரவலான குற்றச்சாட்டை இந்த ஊடங்கள் நிரூபித்து வருகின்றன.

குறிப்பாக 54 வீதத்திற்கும் மேற்பட்டோர் வெளிப்படையான சிறுபாண்மையினராக இருக்கும் ரொறன்ரோப் பாரிய பிரதேசத்தில்; இந்த ஊடகங்கள் பெரும்பாண்மையாக உள்ள புலம்பெயர்ந்த குடிவரவாளர்கள் சம்பந்தமான செய்திகளை கொணராமல் தங்களது நிகழ்ச்சி திட்டத்தின் படியே செயற்படுகின்றன என்பது பரவலான ஒரு குற்றச்சாட்டு.

திரு.பற்றிக் பிறவுன் அவர்களை தவிடுபொடியாக்கும் திட்டத்துடன் செயற்பட்ட விக் பெடலி மற்றும் ரான்டி கில்லர் தொடர்பான பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன. இவை பற்றி எந்த ஊடங்களும் விவாதிக்காமல் திரு பற்றிக் மீது குறிவைப்பதற்கான காரணம் அவர் சிறுபாண்மை மக்களைக் கட்சியில் சேர்த்தார் என்ற பரவலான குற்றச்சாட்டை நிரூபிப்பது போன்றதே இந்தச் செயற்பாடு.

https://www.thepostmillennial.com/allegations-sexual-harassment-interim-pc-leader-vic-fedeli/

MPP Hillier harassed municipal staff in Tay Valley, review finds

https://www.insideottawavalley.com/news-story/7575363-mpp-hillier-under-harassment-investigation-by-tay-valley-township/

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top