மைத்திரிக்கு உயிர் அச்சுறுத்தல்! எச்சரிக்கும் மகிந்த .

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். கந்தளாய் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசுகையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிரியை வெளியில் தேடவேண்டியதில்லை. வீட்டுக்குள்ளேயே எதிரிகள் இருக்கின்றனர். எனவே, அவர் அவதானமாக இருக்க வேண்டும்.
தவறான இடத்தில் எதிரி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்கியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் கூறிவரும் உதாரணங்களில் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.