மைத்திரியும், ரணிலும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்! – தினேஸ் குணவர்த்தன

உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெளிவான வெற்றியைப் பெற்றுள்ளதால், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய அமைச்சர்களுக்கு பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், நாட்டை பிரிவுப்படுத்தும் அரசியலமைப்பைக் கொண்டு வந்தமை, உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளால் கடன்பட்டிருந்த மக்களின் கோபம் தேர்தல் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இருவரும் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமாச் செய்வதே பொருத்தமானது என்றும் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.