News

யாழில் ஜனாதிபதி கூறிய கருத்திற்கு எதிர்ப்பு! ஆலய வளாகத்தில் கதறியழுத தாய்மார்கள்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 351ஆவது நாளாகவும் தமது சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வருடத்தில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலரிமாளிகைக்கு அழைத்து அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு ஒரு வருடமாகின்றது. இந்த நிலையில் இன்று காலை முதல் அடையாள உணவு தவிர்ப்பை மேற்கொண்டு நாளையுடன் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவடைந்து சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றவுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் இன்று பிற்பகல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்குச் சென்றனர். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எவரும் எங்களிடம் இல்லை. அவர்கள் விரும்பினால் இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ள கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளை வெளிப்படுத்தக் கோரியுள்ளனர்.

அத்துடன், கந்தசாமி ஆலயத்தில் விசேட பிரார்த்தனை இடம்பெற்ற நிலையில், தேங்காய் உடைத்து தமது உறவுகளை வெளிப்படுத்தக்கோரி ஆலய வளவில் கண்ணீர்விட்டு கதறியழுதுள்ளனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், “எமது கண்ணீரை வெளிநாடுகள் வந்து பார்க்க வேண்டும். வயதுபோன தாய்மார்கள் பல நாட்களாக உணவு தவிர்ப்பு மேடையிலிருந்து கதறியழுவது உங்களுடைய காதுகளில் கேட்கவில்லையா? ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக வந்து இறங்கி எங்களுடைய பிரச்சினைகளில் தலையிட வேண்டும்” என தெரிவித்து கதறியழுதுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top