News

யாழ். மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு!

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவரின் சடலம் குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவை சேர்ந்த யஸ்டின் சாமுவேல் என்ற 26 வயதுடைய மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் யாழ்.பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்தார். குறித்த வீட்டிலிருந்தே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top