ரணிலுக்கு எதிரான தீர்மானம் தேவையான நேரத்தில் வரும்! அமைச்சர் உறுதி .

பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவித்தல் மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் அது சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறு நம்பிக்கை இல்லாத் தீர்மானம கொண்டுவரப்பட்டால் தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் அதனை எதிர்கொள்வோம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் உரிய தீர்மானத்தை மேற்கொள்வோம். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்கு அமைச்சர்கள் சிலர் வருகை தராமைக்கான காரணம் பிரதமர் மீதான எதிர்ப்பு அல்ல. அவர்கள் வேறு காரணங்களினால் தங்களுக்க சமூகமளிக்க முடியாமல் இருப்பதை முற்கூட்டியே ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டார்கள் என்றும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.