News

ராஜபக்ஷ தரப்பினரை பதற்றமடைய செய்துள்ள சரத் பொன்சேகா!

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவியை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த தீர்மானம் காரணமாக மஹிந்த தரப்பினர் மற்றும் அரசாங்கத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் பதற்றமடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஊழல், மோசடியார்கள், கொலை குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கபப்ட்ட போதிலும் சமகால அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, நீதி அமைச்சு அதற்கு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளாத நிலையில், இறுதியாக நடந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருந்ததனை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில் சரத் பொன்சேகாவுக்கு அந்த பதவியை வழங்க தீர்மானித்தமை தொடர்பில் மஹிந்த தரப்பினர் பதற்றமடைந்துள்ளனர். இந்தத் தீர்மானத்தை மாற்றுவதற்கு அவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் தமக்கு எதிரான சக்தியாக சரத் பொன்சேகா வளர்ந்து விடுவார் என்ற அச்சம் காரணமாக, அவரை கைது செய்த ராஜபக்ஷ ரெஜிமென்ட் சிறையில் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top