Canada

ரொறொன்ரோவின் தொடர் கொலைகாரனின் பட்டியலில் ஆறாவதாக தமிழர் ஒருவர்!

அண்மையில் ரொறொன்ரோவில் பரபரப்பை ஏற்படுத்திய தொடர் கொலைகாரன் ஒருவன் ஆறு பேர்களை கொன்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வரிசையில் வெள்ளிக்கிழமை ஆறாவதாக 2010-ல் நகரின் ஓரின சேர்க்கை சமூக பகுதியில் இருந்து காணாமல் போன 40-வயதுடைய ஸ்கந்தராஜா நவரட்னம் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நபர் நகரின் சேர்ச் மற்றும் வெலெஸ்லி பகுதியில் Houston திட்டத்தின் பிரகாரம் 2012-ல் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர். கொலையாளி மக்ஆதரின் முகநூல் பகுதியில் நண்பராக காணப்பட்டுள்ளார். ஜனவரி 18-ல் 66-வயதுடைய சுய தொழில் நில சீரமைப்பாளரான மக்ஆதர் செலிம் எசென் மற்றும் அன்ட்ரூ கின்ஸ்மன் ஆகிய இருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து விசாரனைகளிலிருந்து மேலும் மூவரை கொலை செய்தமை தெரியவந்தது. இவரால் பாதிக்கப்பட்ட-கொலை செய்யப்பட்டவர்கள்: மஜிட் கெய்ஹான்-58 வயதுடைய ரொறொன்ரோ வாசி. ரொறொன்ரோ ஓரின சேர்க்கையாளர் கிராம பகுதியில் இருந்து காணாமல் போனதாக 2012-2014 காலப்பகுதியில் தேடப்பட்டு வந்தவர்.

சோறுஷ் மஹ்முடி: 2015ல் ரொறொன்ரோ கிழக்கு பகுதியில் இருந்து காணாமல் போனவர். வயது50. டீன் லிசோவிக்: 43 அல்லது 44வயது மதிக்கத்தக்கவர். 2016-2017 ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் காணாமல் போய் உள்ளார். செலிம் இசென்: 44-வயது. 2017ஏப்ரலில் நகரின் ஓரின சேர்க்கையாளர் கிராமத்திலிருந்து காணாமல் போயுள்ளார். இவரது மறைவை தொடர்ந்து பொலிசார் கடந்த ஆகஸ்டில் Project Prism எனப்படும் திட்டத்தை ஆரம்பித்தனர்.

ஐந்து மாதங்களின் பின்னர் பொலிசார் மக்ஆதர் மீது இவரது மரணம் குறித்து குற்றம் சுமத்தினர். அன்ட்ரூ கின்ஸ்மன்: 49வயதுடையவர். நகரின் ஓரின சேர்க்கையாளர் கிராமத்திலிருந்து 2017-யூன் மாத இறுதியில் இவரும் காணாமல் போயுள்ளார். இவருக்கும் மக்ஆதருக்கும் பாலியல் தொடர்பு இருந்துள்ளதென பொலிசார் தெரிவித்துள்ளனர். ஸ்கந்தராஜா நவரட்னம்: 40-வயதுடைய இவர் 2010ல் காணாமல் போய் உள்ளார். Project Houston திட்டத்தின் கீழ் இவரது மறைவு புலன்விசாரனை செய்யப்பட்டது. இவரது மரணத்திற்கு மக்ஆதர் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

மேற்குறித்த ஆறு மனிதர்களும் ரொறொன்ரோ ஓரின சேர்க்கையாளர்கள் கிராமத்துடன் தொடர்பு கொண்டவர்கள். நவரட்னம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24ல் நவரட்னத்தின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவருக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்தனர். நவரட்னம் திரும்ப வருவார் என அனைவரும் நம்;பி இருந்தனர். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நம்பிக்கை மறைந்தது. நவரட்னம் கொலை செய்யப்பட்டுள்ளார் என நவரட்னத்தின் எஞ்சியுள்ள பற்களின் பதிவுகள் நவரட்னம் இறந்தது தெளிவாகியது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top