News

லண்டனில் இரண்டு மணி நேரத்தில் இரண்டு பேர் குத்தி கொலை .

இரண்டு பேர் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக லண்டன் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லண்டனின் Camden பகுதியில் உள்ள Bartholomew சாலையில் இளைஞர் ஒருவர் மர்மநபர் சிலரால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அந்த சம்பவ பகுதிக்கு பொலிசார் சென்ற சிறிது நேரத்தில் Malden சாலையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் குத்து பட்ட நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிசார் கூறுகையில், Bartholomew சாலையில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக இரவு 8.30 மணிக்கு தகவல் வந்தது.

அதைத் தொடர்ந்து இரவு 10.15 மணிக்கு Malden சாலையில் ஒருவர் கத்தியால் குத்து பட்டு கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட இரண்டு நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டுமின்றி இரண்டாவது நபர் இறந்து கிடந்த இடத்தில் ஒரு குழு இருந்ததாகவும், அங்கு அவர்கள் சத்தம் போட்டு சண்டையில் ஈடுபட்டதாக அருகில் உள்ள நபர் ஒருவர் கூறியுள்ளதால், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு ஆரம்பித்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட சரியாக கடக்காத நிலையில், லண்டனில் இந்த இரண்டு மாதங்களில் 16 பேர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த நபர்கள் குறித்து பொலிசார் தற்போது வரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.




Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top