Canada

லண்டனில் தமிழர்களை கழுத்தறுப்பேன் என மிரட்டிய இனவாத சிங்கள இராணுவ அதிகாரியை காப்பாற்றிய இனவாதி மைத்திரி !!

லண்டனில் தமிழர்களை கழுத்தறுப்பேன் என மிரட்டிய இனவாத சிங்கள இராணுவ அதிகாரியை காப்பாற்றிய இனவாதி மைத்திரி !!

மைத்திரியின் சுயரூபம் அமபலம்.. நல்லாட்சி நல்லாட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றும் கொள்ளையாட்சி இதுதானா.. மக்களே அவதானம்..

லண்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் இனவாதி பிரியங்க பெர்ணான்டோ எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளான்.

லண்டனிலுள்ள தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டு பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ பணி நீக்கம் செய்யப்பட்டான்.

இந்நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளான். பணி நீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளான் இந்த மைத்திரி.

குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு மைத்திரி ஆலோசனை வழங்கியுள்ளான்.

கடந்த நான்காம் திகதி சுதந்திர தினத்தின் போது, தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களின் கழுதை அறுக்கப் போவதாக பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ அச்சுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து சிங்கள தேசமும் தமிழர்களுக்கு எதிராக தான் இருப்பார்களே ஒழிய ஆதரவாக என்றுமே இருக்கப்போவதில்லை.. சிங்கள அரசும் சரி சிங்கள மக்களும் சரி..

எமது தமிழ் அரசியல்வாதிகளே சிங்கள தேசத்துடன் கைகுலுக்கி இருக்கும் போது என்ன செய்வது ?

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top