News

லண்டனில் தமிழர்களை சைகையால் கழுத்தை வெட்டுவோம் என மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரியின் உண்மை முகம்! காணொளி.. போட்டோஸ் .

இலங்கையின் 70-வது சுதந்திர தினம் அந்நாட்டு மக்களால் நேற்று கொண்டாடப்பட்டது. இதை கொண்டாடும் விதமாக லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் சார்பாக அங்கு வாழும் இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த தமிழர்கள், இலங்கை சுதந்திர தினத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அவர்கள், போரின்போது காணாமல் போன சிறைக் கைதிகளின் நிலை என்ன, அரசியல் கைதிகள் உடனடியாக விடிவிக்க வேண்டும், இலங்கை இராணுவம் தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும்த மிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்லக் கூடாது, இலங்கை தமிழர்களுக்கு சுயநிர்ணயம் செய்யும் உரிமை வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டனர்.

அப்போது இலங்கைத் தூதரக அதிகாரி ஒருவர் தமிழர்களை மிரட்டும் தொனியில் கழுத்தை வெட்டுவோம் என சைகை காட்டி மிரட்டியுள்ளார். தமிழ் மக்களை பார்த்து இராணுவ அதிகாரி சைகை மூலம் எச்சரிக்கை விடுக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top