லண்டனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க போராடும் தீ அணைப்புப் படையினர் .
லண்டனில் Great Portland Streetஇல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகை எழுந்ததைக் கண்டு இதுவரை 40 பேர் 999ஐ அழைத்துள்ளனர். 10 தீ அணைப்பு வாகனங்களுடன் 50 தீ அணைப்புப் படையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். தீ விபத்தை அடுத்து சாலை மூடப்பட்டுள்ளது.
கட்டிட வேலை நடைபெறும் இடமொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
இந்தப்பகுதியில்தான் BBC அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.