லண்டனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க போராடும் 72 வீரர்கள் .

லண்டனில் உள்ள ஒர்க்ஷாப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் West Drayton பகுதியில் Trout சாலையில் அமைந்திருக்கும் Kirby Estate-ல் உள்ள ஒர்க்ஷாப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் இது குறித்த தகவல் உள்ளூர் நேரப்படி காலை 11.36 மணிக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருவதாக கூறப்படுகிறது.
தீயை அணைப்பதில் 72 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக Hillingdon, Hayes, Heathrow, Southall, Feltham ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை எனவும், இந்த விபத்தினால் யாருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று அங்கிருக்கும் ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தீவிபத்தில் சிக்கியுள்ள ஒர்க்ஷாப்பின் நான்கில் மூன்று பங்கு எரிந்து நாசமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.