வடக்கில் சு.கவின் ஆதரவு யாருக்கு? முடிவு மைத்திரி கையில் .

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதியே எடுப்பார் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வடக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு எந்தக் கட்சியும் தனித்து அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் ஏனைய கட்சிகளின் ஆதரவை நாடவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு பற்றிக் கேட்டபோதே அங்கஜன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, சபைகளில் யாரும் ஆட்சியமைப்பதற்கு எதிராக எங்களது கட்சி இருக்காது என்றும் கூறியுள்ளார்.
ஆனால், தவறான செயற்பாடுகளுக்கு நாம் ஆதரவை வழங்குவோம் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது எனவும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.