வடக்கு ஜப்பானில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி

வடக்கு ஜப்பானில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி வடக்கு ஜப்பானில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
வடக்கு ஜப்பானில் ஹொக்கைடோ நகரில் சப்போரோ என்ற பகுதியில் உள்ளூர் அமைப்பு முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறது. 3 அடுக்குகள் கொண்ட மாடியில் நிதி நெருக்கடியில் இருக்கும் முதியோர்கள் குறைந்த வாடகையில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான பணியையும் இந்த அமைப்பு செய்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 11 பேர் சிக்கி பலியாகினர். மற்ற 5 பேர் சிறிய காயங்களுடன் தப்பினர்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் பலியானவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பனிபடர்ந்த சூழ்நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சம்பவம் நடந்தபொழுது ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை என கூறப்படுகிறது.