வணிக கட்டிடமொன்றில் நடந்த வெடி விபத்தில் பிள்ளை உட்பட மூவர் காயம்!

கனடா- மிசிசாகா பகுதியில் வணிக கட்டிடமொன்றில் இன்று காலை இடம்பெற்ற வெடி விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். ஞாயிற்றுகிழமை காலை 7.28-மணியளவில் அக்னெஸ் மற்றும் Hurontario வீதி பகுதி மிசிசாகாவில் டன்டாஸ் வீதிக்கண்மையில் விபத்து நடந்துள்ளதாக அவசர சேவை பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆண் ஒருவர் கடுமையான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பெண் ஒருவரும் சிறு பிள்ளை ஒன்றும் சிறிய காயகளுடன் பாதிக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவ சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். வெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை. div>