News

வல்வெட்டித்துறை நகரசபையைக் கைப்பற்றுகிறது கூட்டமைப்பு! – வெடி கொளுத்தி கொண்டாட்டம்

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

வல்வெட்டித்துறை நகரம், சிவன்கோவிலடி வட்டாரம், மயிலியதனை, கொம்மந்தறை, ரேவடி, பொலிகண்டி, வல்வெட்டி வடக்கு ஆகிய ஏழு வட்டாரங்களிலும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தொண்டைமானாறு வட்டாரத்தை ஈபிடிபி கைப்பற்றியுள்ளது. ஆதிகோவிலடி வட்டாரத்தில் சுயேட்சைக்குழு வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்வெட்டித்துறை நகரசபையின் மொத்த ஆசனங்கள் 15 ஆகும். இங்கு ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்புக்கு இன்னும் ஒரு ஆசனமே தேவைப்படுகிறது. விகிதாசார முறையிலான உறுப்பினர்கள் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, வல்வெட்டித்துறையில் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றியை, ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாடி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top