Canada

வெள்ளத்தால் அடித்து சென்ற சிறுவனை தேடும் நூற்றுகணக்கான தன்னார்வ தொண்டர்கள்!

ஐந்து நாட்களிற்கு முன்னர் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட 3-வயதுடைய ஒன்ராறியோ சிறுவனை தேடும் முயற்சியில் கிட்டத்தட்ட 500-தன்னார்வ தொண்டர்கள் ஞாயிற்றுகிழமை கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தாய் ஒருவர் தனக்கு இரண்டு மற்றும் ஆறு வயதில் இரண்டு பையன்கள் இருப்பதாகவும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் நிலைமை தனக்கு அதிர்ச்சியை அளித்ததால் தேடும் முயற்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

அனைவரையும் கலங்க வைத்த இச்சிறுவனின் தேடுதல் முயற்சி திங்கள்கிழமையும் தொடர்கின்றது. தாயாரின் மினிவான் வெள்ளத்தில் அடித்து செல்ல மகனுடன் வாகனதில் இருந்து வெளியேறியவரின் கைப்படியிலிருந்து சிறுவனும் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனான். சிறுவனை உயிருடன் கண்டுபிடிக்கலாம் என பொலிசார் எதிர்பார்க்கவில்லை இருப்பினும் ஒன்ராறியோ பூராகவும் இருந்த நூற்று கணக்கான மக்கள் தேடும் முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

வாட்டர்லூ ஒன்ராறியோவிலிருந்து வந்த அலிசியா சில்வெஸ்ட் என்ற பெண் ஒருவர் சிறுவனின் குடும்பத்தவர்களிற்கும் தேடுதல் முயற்சியில் ஈடுபடுபவர்களிற்கும் உணவு தயாரித்து வழங்குவதில் உதவுகின்றார். தேடுதல் ஒரு புறம் இடம்பெற சிறுவனின் வீட்டருகிலும் காணாமற்போன பாலத்தின் அருகாமையிலும் மென்மையான துணியினால் அடைக்கப்பட்ட பொம்மை மிருகங்கள் பூக்கள் மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டு கண்விழிப்பு ஆராதனை இடம்பெற்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top