Canada

வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

ஒன்ராறியோ-பிரான்ட்வோட் நகரில் அவசர கால நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. பலத்த மழை, பனி நெரிசல்கள் காரணமாக கிரான்ட் றிவர் பரவலான வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களிற்கு பின்னர் பிரான்ட்வோட்டில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

2200 வீடுகள் மற்றும் கிட்டத்தட்ட 5,000மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மேயர் விரெயில் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை வரை குடியிருப்பாளர்கள் தங்கள் இல்லங்களிற்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.

சில வீடுகளின் நிலக்கீழ்பகுதிகளில் மூன்று மீற்றர்கள் அளவிலான தண்ணீர் உட்புகுந்துள்ளது. வெளியேற்றப்பட்டவர்களிற்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் செவ்வாய்கிழமை மாலை பிரான்ட்வோட்டிற்கு சென்றுள்ளார். ஒறேஞ்வில் ஒன்ராறியோவிற்கு கிட்;டத்தட்ட 100கிலோ மீற்றர்கள் தொலைவில் மினிவான் ஒன்று வெள்ளத்தில் அடித்து ஆற்றிற்குள் சென்றதால் சிறு பிள்ளை ஒன்று காணாமல் போய் உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top