India

வேட்பாளர் படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்தை வாங்கச் சொன்னது யார்? : அரசு டாக்டர் பாலாஜி பகீர் வாக்குமூலம்

சென்னை: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், 3 தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களின் படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்தை வாங்கச் சொன்னது யார் என்பது குறித்து அரசு டாக்டர் பாலாஜி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மூலம் நீதிபதி ஆறுமுகசாமி அரசு டாக்டர்கள் குழுவிடம் விசாரணை நடத்தினார். அதில் கடந்த டிசம்பர் 7ம் தேதி ஆஜரானபோது அரசு டாக்டர் பாலாஜி மட்டும் ஜெயலலிதாவை பார்த்ததாக விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைதேர்தல் தொடர்பான வேட்பாளர்கள் படிவத்தில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றபோது நான் உடன் இருந்தேன் என்றும் அரசு டாக்டர் பாலாஜி தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கடந்த ஜனவரி 25ம் தேதி அவர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், மூன்றாவது முறையாக அரசு டாக்டர் பாலாஜி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில், அரசு டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று காலை 10.15 மணியளவில் மீண்டும் ஆஜரானார். சுமார் 3 மணி நேரம் நடந்த விசாரணையில் ஏற்கனவே சாட்சியம் அளித்தவர்கள் சிலர் குறிப்பிட்ட தகவல்களை மேற்ேகாள்காட்டி நீதிபதி ஆறுமுகசாமி டாக்டர் பாலாஜியிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து சந்தேகம், சிகிச்சையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட மற்ற டாக்டர்களை ஏன் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்று டாக்டரிடம் நீதிபதி கேட்டார். எந்த அடிப்படையில் 3 அதிமுகவின் வேட்பாளர்கள் படிவத்தில் கையெழுத்து வாங்கினீர்கள் என்பது குறித்தும் நீதிபதி கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, பாலாஜி விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை நீதிபதி வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டார்.

இது குறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறும் போது, 3 தொகுதிக்கான இடைதேர்தலின்போது வேட்பாளர் படிவத்தில் ஜெயலலிதாவிடம் கையெழுத்து பெற்ற போது நான் உடன் இருந்தேன் என்று டாக்டர் பாலாஜி மீண்டும் உறுதியளித்தார். ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதை உறுதி செய்யும் வகையில், அந்த படிவத்தில் நான் கையொப்பமிட்டேன். இதற்காக முதல்வர், தலைமைசெயலாளரிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்றும் பாலாஜி தெரிவித்தார். மேலும், அவர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொலைபேசியில் என்னிடம் கூறியதால் தான் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றேன்என்றும் பாலாஜி தெரிவித்தார்

விசாரணை முடித்து வெளியே வந்த டாக்டர் பாலாஜி நிருபர்களிடம் கூறும் போது, கைரேகை தொடர்பாக எதுவும் கேட்கவில்லை. இப்போதைக்கு மீண்டும் ஆஜராவதற்கு குறித்து எதுவும் கூறவில்லை’ என்றார். சசிகலாவுக்கு கொடுக்கப்படவுள்ள ஆவணங்கள்: விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 28 பிரமாண பத்திரங்கள், 302 புகார், 144 மனுக்கள், சாட்சியம் அளித்தவர்களின் வாக்குமூலங்கள், அவர்கள் சமர்பித்த ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சசிகலா தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் கூடிய விரைவில் கொடுக்கப்படும். எதிர்தரப்பை குறுக்கு விசாரணை செய்ய சசிகலா மீதான புகார்கள் மற்றும் விவரங்கள் குறித்து கேட்கப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 26ம் தேதி சசிகலா தரப்பில் பிராமண வாக்குமூலம் தாக்கல் செய்யப்படுகிறது.

ஜெயலலிதா சமையலர் ராஜம்மாளுக்கு சம்மன்:

போயஸ் கார்டனில் சமையல்காரர் ராஜம்மாள் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவர், மட்டுமே ஜெயலலிதாவின் அறைக்கு சென்று வரும் அளவுக்கு அதிகாரம் உள்ளவர். போயஸ்கார்டனுக்கு சென்று வரும் நபர்களுக்கு ராஜம்மாளை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்று அதிமுகவினரே சிலர் கூறுவர். இந்த நிலையில், அவரிடம் செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது குறித்து அவரிடம் விசாரிக்க நீதிபதி முடிவு செய்துள்ளார். மேலும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பிய முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் பிப்ரவரி 21ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியிருப்பதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சசிகலாவா… அது யாரு?

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து கமிஷன் மூலம் 29 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில், சசிகலா உறவினர்கள் மட்டுமே சசிகலா குறித்து கருத்து தெரிவித்தனர். ஆனால், மற்ற சாட்சிகள் சசிகலா யார் என்று நீதிபதியிடம் கேட்டனர். மேலும், இந்த சாட்சிகள் சசிகலா குறித்து பேசவோ, அவர் பற்றிய கருத்துக்கள் குறித்தோ நீதிபதியிடம் தெரிவிக்கவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top