ஹாங்காங்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹாங்காங்கில் ஒரு இரட்டை அடுக்கு பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 3 பெண்கள் உட்பட 18 பேர் பலியாகினர்.
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹாங்காங்கின் தை போ நகரில் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் 15 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் காயமடைந்த சுமார் 37 பேர் 50 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள 12 மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 19 பேர் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் 19 பேர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் 18 பேர் மட்டுமே மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.