News

 சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி!

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 11 வட்டார ரீதியான உறுப்பினர்களையும், 7 விகிதாசார ரீதியான உறுப்பினர்களையும் கொண்ட சாவகச்சேரி நகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 வட்டாரங்களிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1 வட்டாரத்திலும் வெற்றி பெற்றுள்ளன. விகிதாசார முறையிலான ஆசனப் பகிர்வு இன்னமும் அறிவிக்கப்படாத போதிலும், இங்கு தமிழ்க் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.

அதேவேளை, பருத்தித்துறை நகரசபையிலும் அதிகளவு வட்டாரங்களில் தமிழ்க் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

Latest News

To Top