Canada

$23.3M லாட்டரி வெற்றியுடன் கோடீஸ் வரர்களான இளைப்பாறிய தம்பதியர்!

இளைப்பாறிய மனேஜர் கடந்த மாதம் சீனாவிற்கு பயணித்த போது தனது மனைவியிடம் இரண்டு காரியங்களை செய்யும் படி கேட்டுள்ளார். ஒன்று நாயை துப்பரவாக்கி கவனிப்பது மற்றயது அவர்களது வழக்கமான லாட்டரி ரிக்கெட்டை வாங்குவது.

கனடா திரும்பிய சமயம் நல்ல செய்தியாக வாங்கிய லாட்டரி மூலம் $23,324,912.20 ஜக்பொட்டை வென்றது. ஒன்ராறியோ சிமித்வில்லை சேர்ந்த இவர்கள் ரொறொன்ரோவில் தங்கள் பரிசு தொகைக்கான காசோலையை இன்று பெற்று கொண்டனர்.

இந்த வெற்றி தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும ஒன்றாக அமைந்துள்ளதென இருவரும் தெரிவித்தனர். 36-வருடங்களாக திருமண வாழ்க்கையை வாழும் இவர்கள் தொடர்ந்து லாட்டரி சீட்டுக்களை வாங்கி வந்துள்ளனர்.

டொனால்டன் வழக்கமாக சீட்டுக்களை வாங்குவார். சில சமயம் சன்ட்ரா வாங்குவார். இவர் ஒரு personal support worker ஆக இருந்து இளைப்பாறியவர். இவர் இத்தடவை ஒரு குயிக் பிக் ரிக்கெட்ட தெரிவு செய்தார். முடிவு அதிஷ்டம்.

இவர்களிற்கு இரு பிள்ளைகளும் இரண்டு பேர பிள்ளைகளும் உள்ளனர். புதிய வாகனம்- எஸ்யுவி-ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top