Canada

ரொறொன்ரோ; நாசவேலை காரணமாக சுரங்க ரயில் சேவை நிறுத்தப்பட்டது!

ரொறொன்ரோ–நகரின் மேற்கு சுரங்க ரயில் சேவை வெள்ளிக்கிழமை காலை நாசவேலை நடவடிக்கை ஒன்று காரணமாக நிறுத்தப்பட்டதென TTC தெரிவித்துள்ளது. றோயல் யோர்க் நிலையம் காலை 10மணிக்கு பொலிசாரின் புலன்விசாரனைக்காக மூடப்பட்டது. இதன் காரணமாக கிப்லிங் மற்றும் ஜேன் நிலையங்களிற்கு இடைப்பட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

றோயல் யோர்க் நிலையத்திற்கு அருகாமையில் சிக்னல்கள் வேண்டுமென்றே சேதமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை மிகவும் தீவிரமானதாக கருதுவதால் பொலிசாரின் தலையீடு ஏற்பட்டதாகவும் அதனால் ஒரு பகுதி ரயில் பாதை மூடவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top