கனடாவில் வாகன விபத்தில் ஆறு பிள்ளைகள் உட்பட எட்டு பேர்கள் படுகாயம்!

ஒன்ராறியோ-பார்ரி வடக்கில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டு பேர்கள் பேரூந்து ஒன்று வானுடன் மோதிய விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 10வயதுடைய ஒரு பிள்ளையின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் மற்றய சிறுவர்களும் இரண்டு வயது வந்தவர்களும் கடுமையான காயங்களிற்கு உள்ளானார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவர்களின் வயதுகள்:
இரண்டு 4-வயது
ஒன்று 8-வயது
இரண்டு 10-வயது
ஒன்று 15-வயது
சிறுவர்களுடன் சென்ற மினிவான் இளவயதினர் 40பேர்கள் நிறைந்திருந்த பயண பேரூந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை 26-ல் பார்ரிக்கு அருகாமையில் ஸ்ரெயினர் ரவுனில் விபத்து இடம்பெற்றுள்ளது.
வான் மத்திய லைனை கடந்து பனிச்சறுக்கல் பயணம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் மாணவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்த பயண பேரூந்துடன் மோதியதாக ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வான் மத்திய லைனை கடக்க நேரிட்ட காரணம் தெரியவரவில்லை. வானில் பயணித்த எட்டு பேர்களும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தீயணைப்பு பரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். வான் ரெக்சஸ் உரிமத்தகட்டை கொண்டுள்ளதென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பயண பேரூந்தில் ஹமில்ரன் சென்.தோமஸ் மோர் கத்தோலிக்க இரண்டாம் நிலை பள்ளி மாணவர்கள் இருந்துள்ளனர். இவர்கள் கொலிங்வூட் புளு மவுன்ரின் ரிசாட்டில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். பொலிசார் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்