டேவிட் கேமரூன் பெயரில் போலி ஓட்டுனர் அடையாள அட்டை: 1 மில்லியன் பவுண்ட்ஸ் மோசடி .

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஓட்டுனர் அடையாள அட்டையை போன்று போலி அடையாள அட்டை அச்சடித்துள்ள கும்பல் சிக்கியுள்ளது. பிரித்தானியாவின் Cheshunt பகுதியில் உள்ள Hertfordshire பகுதியைச் சேர்ந்தவன் Dragomir(34). இவனுக்கு சொந்தமான நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனின் ஓட்டுனர் அடையாள அட்டையைப் போன்று போலி அடையாள அட்டை அச்சடித்து வைத்துள்ளனர். அதை இவர்கள் இணையத்தில் இது போன்று எங்களால் எதையும் போலியாக செய்து தர முடியும் என்று விளம்பரமும் செய்துள்ளனர்.
தொடர்ந்து அந்த நிறுவனத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, ஏராளாமன் போலி சான்றிதழ்கள், ஓட்டுனர் அடையாள அட்டைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இவர்கள் செய்து கொடுக்கும் இந்த போலி சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை பயன்படுத்தி அதை பெற்ற நபர்கள் பல மில்லியன் பவுண்டஸ் கணக்கில் மோசடி செய்திருக்கலாம் எனவும், இதன் மூலம் இந்த கும்பலுக்கு 1 மில்லியன் பவுண்ட்சுக்கும் மேலாக பணம் கிடைத்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த பணத்தை இவர்கள் பல்வேறு வங்கிகள் மூலம் பெற்றுள்ளனர். இந்த கும்பல் பிரித்தானியாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்துள்ளது.
Dragomir-வுடன் Mihai Cirstoiu(37), George Cerneanu(25), Georgian Alexandru Stanciu(27), Maria Bilici( 34) ஆகியோர் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி இது ஒரு மிகப் பெரிய மோசடி என்று கூறி Dragomir-க்கு 7 ஆண்டுகள் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியும், Mihai Cirstoiu-க்கு ஆறு ஆண்டுகளும், George Cerneanu மற்றும் Alexandru Stanciu-க்கு 30 மாதமும் Maria Bilici-க்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் Dragomir ரோமானியாவைச் சேர்ந்தவன் எனவும், அங்கு இவன் தேடப்படும் குற்றவாளி எனவும் கடந்த 2007-ஆம் ஆண்டு இங்கு வந்து தன்னுடைய பெயரை Andrei Bernath என மாற்றி வாழ்ந்து வந்துள்ளான் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. >