Canada

கொந்தளிப்பு காரணமாக தரையிறக்கப்பட்ட எயர் கனடா விமானம்!

வியாழக்கிழமை மாலை பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் எயர் கனடா விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது. விமானத்தில் ஏற்பட்ட கடுமையான கொந்தளிப்பு காரணமாக பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு காயங்களுடன் சிலருக்கு சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இருவர் வைத்தியசாலைக்கு அனுப்பபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமான பணியாளர்கள் இருவர் காயமடைந்ததாக எயர் கனடா தெரிவித்துள்ளது.

விமானம் AC1806 சான் ஜோஸ், கொஸ்ர றிக்கா சென்று கொண்டிருந்த சமயம் ரென்னிசீக்கு மேலாக பறந்து கொண்டிருக்கையில் பின் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு ரொறொன்ரோவிற்கு திருப்ப பட்டது. வியாழக்கிழமை இரவு 8மணியளவில் சம்பவம் நடந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top